உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

அரோகரா கோஷத்துடன் கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்

திருப்பூர்: கந்த சஷ்டி விழா துவங்கியதையொட்டி, காப்பு கட்டி, முருக பக்தர்கள் விரதத்தை துவக்கியுள்ளனர். கந்த சஷ்டி விழா நேற்று துவங்கியது.திருப்பூர் வாலிபாளையம், கொங்கணகிரி, அலகுமலை, சென்னிமலை, ஊத்துக்குளி கைத்தமலை, மலைக்கோவில், விராலிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி, கந்த சஷ்டி விரதம் துவக்க விழா நடந்தது.


சிவன்மலை: காங்கயம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சி நேற்று துவங்கியது. காலை, சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன.ஐநுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, பலர் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.ஒவ்வொரு ஆண்டும், சுவாமி மலையில் இருந்து இறங்கி, மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சென்று, தினமும் காலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடக்கும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக, சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உட்பட அனைத்து உற்சவ நிகழ்வுகளும் கோவிலுக்குள் நடக்க உள்ளது.அலகுமலை: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் ஆண்டுதோறும் கந்தர் சஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா பரவலால், கந்த சஷ்டி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !