உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சஷ்டி விழா: பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

கந்த சஷ்டி விழா: பழநி கோயிலில் குவிந்த பக்தர்கள்

 பழநி: பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நவ.16 முதல் நவ.19 வரை காலை 8:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று பக்தர்கள் காலையில் வழக்கம் போல் சுவாமி தரிசனத்திற்கு வரத் துவங்கினர். இதனால் பக்தர்கள் கூட்டம் மலைக்கோயிலுக்கு அனுமதிக்கும் குடமுழுக்கு அரங்கம் செல்லும் நுழைவாயிலில் அதிகளவில் கூடியது. கோயில் காவலர்கள் போதுமான அளவு இல்லாததால் பக்தர்கள் சமூக இடைவெளியின்றி கிரிவீதியில் நின்றிருந்தனர். கோயில் வாயில் திறக்கப்பட்டதும் பக்தர்கள் உடல் பரிசோதனை செய்யும் இடத்தில் கூடினர். பரிசோதனைக்குப் பின் சுவாரி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !