யார் இந்த பவுமன்
ADDED :1821 days ago
நரகாசுரனின் இயற்பெயர் பவுமன். வராகமூர்த்தியாக அவதரித்த மகாவிஷ்ணு, பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கப் புறப்பட்டார். அப்போது அவர் பூமாதேவியைத் தீண்டியதால் பவுமன் பிறந்தான். அசுர வதத்தின் போது பிறந்ததால் அசுரபுத்தி கொண்டவனாக அவனிருந்தான். ‛நரன்’ என்பதற்கு ‛மனிதன்’ என்று பொருள். தோற்றத்தில் மனிதனாக இருந்தாலும், தீயகுணங்கள் நிறைந்தவனாக இருந்ததால் நரகாசுரன் எனப்பட்டான்.