உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார சக்திவேல் வாங்கும் விழா

கைலாசநாதர் கோவிலில் சூரசம்ஹார சக்திவேல் வாங்கும் விழா

 நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் நேற்று சக்திவேல் வாங்குதல் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று மாலை 4:00 மணிக்கு விநாயகர், முருகர், வீரபாகு உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு முருகர் காமாட்சியம்மனிடம், சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் முருகர் சிங்கமுக சூரன் வதம் செய்தல் நடந்தது. இன்று சூரசம்ஹார திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !