மனம் இருந்தால் போதும்
ADDED :1810 days ago
‘இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்கிறது குர்ஆன். பணம் இல்லாவிட்டால் பிறருக்கு நன்மை செய்ய முடியாது என யாரும் நினைக்க வேண்டாம். பணம் இல்லாத ஏழைகளும் மனம் இருந்தால் தர்மம் செய்யலாம் என்கிறார் நாயகம்.
* உடன்பிறந்தோரைக் கண்டால் புன்சிரிப்பை பரிசளித்தல்
* கண் முன் நடக்கும் தீமைகளை தடுத்தல்
* தவறு செய்பவருக்கு நல்லதைச் சொல்லி நெறிப்படுத்துதல்
* பார்வை இல்லாதவர்களுக்கு வழி காட்டுதல்
* கல், முள்ளை எடுத்து நடைபாதையை சுத்தப்படுத்துதல்
இவற்றை செய்வதற்கு பணமே தேவையில்லை. மனம் இருந்தால் போதும்.