திதிகளுக்கு உரிய கணபதி வடிவங்கள் எவை?
ADDED :1815 days ago
விநாயகப் பெருமானை எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வணங்கினாலும் காரிய சித்தி கைகூடும் என்றாலும் ஒவ்வொரு திதிக்கும் உரிய விநாயக வடிவங்களை அந்தந்த திதிகளில் வணங்குவது மிகவும் சிறப்பானது. இது நமக்கு விநாயகர் தரும் நன்மைகளை பல மடங்கு அதிகரிக்கும் ஒவ்வொரு திதியன்று வணங்க வேண்டிய விநாயக வடிவங்கள் வருமாறு: பிரதமை திதி- பால கணபதி, துவிதையை திதி - தருண கணபதி, திருதியை திதி - பக்தி கணபதி, சதுர்த்தி திதி- வீர கணபதி, பஞ்சமி திதி - சக்தி கணபதி, சஷ்டி திதி - துவஜ கணபதி சப்தமி திதி - சித்தி கணபதி அஷ்டமி திதி - உச்சிஷ்ட கணபதி, நவமி திதி - விக்ன கணபதி, தசமி திதி - கஷிப்ர கணபதி, ஏகாதசி திதி - ஹேரம்ப கணபதி, துவாதசி திதி - லட்சுமி கணபதி, திரயோதசிதிதி, மகா கணபதி, சதுர்தசி திதி - விஜய கணபதி அமாவாசை, பவுர்ணமி திதி - நிருத்த கணபதி.