அருணகிரியார் அவதார தலம்
ADDED :1861 days ago
முருக பக்தரான அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். இளமையில் பெண்ணாசையில் சிக்கி நோய்க்கு ஆளான அவர், திருவண்ணாமலை கோபுரத்தின் மீதேறி உயிர் விடத் துணிந்தார். முருகப்பெருமான் அவரை காப்பாற்றி ‘முத்தைத்தரு’ என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்தார். அருணகிரிநாதரும் எல்லா முருகன் கோயில்களையும் தரிசித்து பாடத் தொடங்கினார்.