வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் சனிப்பிரதோஷம்
ADDED :1837 days ago
மேட்டுப்பாளையம்; சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில், உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரம் பூஜை நடந்தது. வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், பொடி சந்தனம், குங்குமம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு மலர்களால் அலங்காரம் செய்து, மங்கள ஆரத்தி செய்யப்பட்டது. நந்திஎம்பெருமானுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.