உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பணம் சேர்ப்பது எப்படி

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பணம் சேர்ப்பது எப்படி

பணம் சேர்ப்பது தவறல்ல. அதை எப்படி சேர்க்க வேண்டும் என பைபிள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.

* வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.

* பொய் சொல்லித் திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.

* செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.

* செல்வத்தை குவிக்கிறான் யார் வாரிசு என்று தெரியாமலேயே.

* எரிக்கும் உஷ்ணத்துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அது போலவே  செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.

* பூலோகத்தில் உங்களுக்காக பொக்கிஷங்களை சேர்க்க வேண்டாம். அதை அந்தும், துாரும் அரிக்கும். திருடர்கள் கன்னமிட்டு திருடுகிறார்கள். பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தன் தேவை  போக மிஞ்சியதில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !