அரங்கநாதர் கோவிலில் லட்டு கொடுக்க தடை
ADDED :1820 days ago
ஈரோடு: கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், பக்தர்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதம் வழங்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா, கொரோனா பரவலால், மாவட்ட நிர்வாகத்துடன் கட்டுப்பாடுடன், நடப்பாண்டு நடக்கிறது. விழாவில் கடந்த ஆண்டு, கோவிலின் கட்டுபாட்டை மீறி பலர் லட்டு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை, வெளியில் தயாரித்து வந்து, வினியோகம் செய்தனர். நடப்பாண்டு கொரோனா வைரசால், கோவில் உள், வெளிப்பகுதியில் தனி நபர்கள் லட்டு உள்பட எவ்வித பிரசாதமும் தர அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.