உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சொர்க்கவாசல் திறப்பு: அதிகாலை 4:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சொர்க்கவாசல் திறப்பு: அதிகாலை 4:00 மணி முதல் நேரடி ஒளிபரப்பு

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், தினமலர் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த, 14ம் தேதி இரவு, மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவத்தின் போது, பகல் பத்து, ராப்பத்து என, 20 நாட்களும் திவ்யபிரபந்தம் அபிநயத்துடன் வாசிக்கப்படும். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாக இன்று (25ம் தேதி) அதிகாலை, 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ரெங்கநாதர் கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள், அதிகாலை, 4:00 மணி முதல் தினமலர் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.


https://www.dinamalar.com/video_main.asp?news_id=2275&cat=live


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !