உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹயக்கிரிவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை, மகா யாகம்

ஹயக்கிரிவர் கோயிலில் சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை, மகா யாகம்

மதுரை: யோக நரசிம்மர், ஹயக்கிரிவர் கோயிலில் ஸ்ரீயோக சனீஸ்வரர் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு,  லட்சார்ச்சனை மற்றும் மகா யாகம் துவங்கியது.

சனீஸ்வரர் ஒரு ராசியை கடக்க இரண்டரை ஆண்டு ஆகும். தற்போது தனுசு ராசியில் இருக்கும் சனி 2020 டிச.27 அதிகாலை 5:22 மணிக்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 2023 டிச.20 மாலை 5:23 மணி வரை மகர ராசியில் இருப்பார். இதற்கிடையில் 2023 மார்ச் 29 முதல் ஆக.24 வரை கும்ப ராசிக்கு முன்னோக்கி செல்கிறார். 2023 ஆக.24 டிச.20 வரை மகர ராசியில் இருப்பார். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஹயக்கிரிவர் கோயிலில் லட்சார்ச்சனை மற்றும் மகா யாகம் துவங்கியது. லட்சார்ச்சனை கட்டனம் ரூ.400. லட்சார்ச்சனையில் கலந்து கொள்பவர்களுக்கு பூஜிக்கப்பட்ட வெள்ளி டாலர் பிரசாதம் வழங்கப்படுகிறது.

தொர்ப்புக்கு:
ஸ்ரீநரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட்
மதுரை
செல்: 9842024866, 87780 34151


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !