உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நீங்க பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்

கொரோனா நீங்க பொங்கல் வைத்து வழிபட்ட பெண்கள்

மதுரை: கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி, வேடர்புளியங்குளம், ராகவேந்திரா நகரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உலகில் கொரோனாவால் 8 கோடியே 17 லட்சத்து 23 ஆயிரத்து 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டி, வேடர்புளியங்குளம், ராகவேந்திரா நகர் பகுதி மக்கள் தெரு முழுவதும் மஞ்சல் நீர் தெளித்து, வேப்பிலை கட்டினர். தொடர்ந்து அனைவரும் சேர்ந்து அம்மனை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மஞ்சள் நீரை தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்டு, ஊர்வலமாக மந்தையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். காலரா அதிகமாக பரவிய காலத்தில் இதே வழிபாடு நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும் அம்மன் அருளால் நீங்கும் என இப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !