லாஸ்பேட்டையில் ஆருத்ரா தரிசனம்
ADDED :2109 days ago
புதுச்சேரி; லாஸ்பேட்டையில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் நடந்தது.விழாவை முன்னிட்டு, சிவகாம சுந்தரி உடனுறை நடராஜர் மற்றும் மாணிக்கவாசகருக்கு காலையில் மகா அபிஷேகம், சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டு, உட்பிரகார உலா நடந்தது.மாலையில் சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசன உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி வீதியுலா நடந்தது.