தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ADDED :1738 days ago
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அன்னூர், சத்தி ரோடு, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு புத்தாண்டு ஆராதனை துவங்கி, இன்று அதிகாலை 2:30 மணி வரை நடந்தது. ஆயர் சேகர் புத்தாண்டு செய்தி அளித்தார். அதன்பின் புத்தாண்டு ஆராதனை, காலை 7:30 முதல் 9:00 மணி வரை நடந்தது. ஆலய செயலாளர் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் பிரபு உள்பட, 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. கெம்பநாயக்கன்பாளையம், சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், நேற்று, காலை புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது.