சாமியார் மலையில் புத்தாண்டு நிகழ்ச்சி
ADDED :1741 days ago
பந்தலூர்: பந்தலூர் அருகே சாமியார் மலை சிவன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பந்தலூர் அருகே அய்யன் கொல்லி பகுதியில் மலை உச்சியில் சாமியார் மலை அமைந்துள்ளது. இங்கு உள்ள சிவன் கோவிலில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். நேற்று காலை 5-30 மணி அளவில் நடந்த சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் சாமியார் மலை கோவில் அர்ச்சகர் ஓம்காரனந்தா, அர்ச்சகர் பரமசிவன் குருக்கள் தலைமையிலான குழுவினர் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். சிறப்பு பூஜை மற்றும் நிகழ்ச்சிகளில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.