நல்லவனாக வாழுங்கள்
ADDED :1768 days ago
* நல்லவனாக வாழ விரும்பினால் உன்னிடம் இருப்பதை ஏழைகளுக்கு கொடு.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* நாவடக்கத்துடன் இரு; தேவையில்லாமல் உதடுகளை அதிகம் திறக்காதே.
* உண்மைக்கு எதிராக செயல்படாதே. கசப்பான பொறாமை, சச்சரவை விட்டுவிடு.
* புத்தி இழந்தவனுக்கே திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திப்பது போலிருக்கும்.
* இறுமாப்பில் இருந்து இருதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
– பைபிள்