சிதிலமடைந்த கோவில்கள் புனரமைக்க வலியுறுத்தல்
ADDED :1825 days ago
கரூர்: சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க வேண்டும் என, பூசாரிகள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கரூர், தாந்தோன்றிமலை காளியம்மன் கோவில் வளாகத்தில், பூசாரிகள் முன்னேற்ற சங்கம் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். கிராமக் கோவில் பூசாரிகள் நலவாரிய அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம்; தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் கோசாலை அமைத்து, பசுக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க நிறுவனர் சதீஷ் கண்ணன், மாநில தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.