பலம் தரும் மந்திரம்
ADDED :1763 days ago
“உலகின் இருளைப் போக்கி ஆத்ம பலம் தரும் ஒளிச்சக்தி எதுவோ அதை நமஸ்கரிப்போமாக!” என்று ரிக் வேதம் சூரியனை போற்றுகிறது. காசிப முனிவரின் மகனான சூரியன், வேதங்களில் உள்ள ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாக்கி வான மண்டலத்தில் பவனி வருவதால், ‘சப்தாஸ்தவன்’ என அழைக்கப்படுகிறார். சூரியனின் தேருக்கு கருடனின் சகோதரன் மாதலியே சாரதியாக இருக்கிறார். கிரகங்களுக்கு தேவையான சக்தியை சூரியனே அளிக்கிறார். காயத்ரி மந்திர பலத்தால் சூரியன் வானில் வலம் வருகிறார்.