உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்துபவரா நீங்கள்...

திருத்துபவரா நீங்கள்...


‘‘இளைஞனாக இருந்தபோது உலகத்தை திருத்த வேண்டும் என எண்ணினேன். அதற்காக ஆற்றலை வழங்கும்படி இறைவனிடம் வேண்டினேன். காலம் ஓடியதில் நடுத்தர வயதை அடைந்து விட்டேன். ஆனால் அதுவரை ஒருவரைக் கூட திருத்த முடியவில்லை.
குடும்பத்தாரை மட்டுமாவது திருத்தலாம் என்ற முடிவுக்கு வந்தேன். இதற்கிடையில் முதுமையை அடைந்தேன். குடும்பத்தினரை திருத்துவதும் அதிகப்படியானது தான் என்ற உண்மை புரிந்தது. என் சுய வாழ்வை இழந்து விட்டேனே என்ற கவலை உண்டானது.
பிறரை மாற்ற நான் யார்? என்னை மாற்றிக்கொண்டால் போதும் என்ற தெளிவு பிறந்தது.
“இறைவா! இப்போது நான் எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டுள்ளது. என்னை திருத்திக் கொள்ள வழிகாட்டு’’ என்றேன்.
அப்போது இறைவன் சிரித்தார்.
பயாஸித் என்னும் சூபி ஞானி தன் சுயசரிதையில் இப்படி தெரிவிக்கிறார். மாற்றம் என்பது நமக்குள் நிகழ வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !