உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் என்னும் வைரஸ்

பாவம் என்னும் வைரஸ்


கண்ணுக்கு தெரியாத கிருமிகளை நுண்ணோக்கி மூலமாக காணலாம். காற்றில் இருக்கும் வரை அவை நம்மை பாதிக்காது.  உடலுக்குள் புகுந்தால் பாடாய்படுத்தி விடும். நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும். இந்த கிருமி போலவே கண்ணுக்குத் தெரியாத வைரஸ் ஒன்று இருக்கிறது. அதுதான் சாத்தானின் துாண்டுதலால் உருவாகும் ‘பாவம்’ என்னும் வைரஸ்.   
ஆண்டவரின் கட்டளையை ஏற்காத பாவத்தால் ஆதாமும், ஏவாளும் விஷமரத்தின் பழத்தை சாப்பிட்டு துன்பத்திற்கு ஆளாயினர். பாவங்களின் விளைவைப் பற்றி எண்ணிப் பாருங்கள்.
இதிலிருந்து தப்பிக்க வழியுண்டா? நிச்சயமாக. ‘‘நல்ல எண்ணங்களை மனதில் நிரப்பினால் அது பாவம் என்னும் வைரசுக்கு எதிராக செயல்படும்’’  என்கிறது பைபிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !