ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் சுவாமி வீதியுலா
ADDED :1717 days ago
கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் 82ம் ஆண்டு பிரம்மோற்சவ பெருவிழாவையொட்டி சுவாமிகள் ஊர்வலம் நடைபெற்றது.கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி உற்சவ மூர்த்தி சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக மதியம் உற்சவமூர்த்தி சந்திரசேகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து இரவு சோமாஸ்கந்தர் சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.பின்னர் உற்சவமூர்த்தி சோமாஸ்கந்தர் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. இதில் தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையினர் தேவார, திருவாசகப்படல்களை பாடி ஊர்வலம் வந்தனர்.