மூலவர் சிலைக்கு பக்தர்கள் வரவேற்பு
ADDED :2037 days ago
சூலூர்: கண்ணம்பாளையம் பழனியாண்டவர் கோவில் மூலவர் சிலைக்கு மேள தாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.கண்ணம்பாளையம் பழனியாண்டவர் கோவில் பழமையானது. திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகத்துக்கு கோவில் தயாராகி வருகிறது. மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட பழனி யாண்டவர் சிலை சூலூர் கொண்டுவரப்பட்டது. சூலூர் சிவன் கோவிலில் வைத்து அலங்கார வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து மேள, தாளத்துடன் கண்ணம்பாளையம் கொண்டு வரப்பட்டது. காவடி ஆட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன், அனைத்து கோவில்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதை தொடர்ந்து பழனியாண்டவர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.