உத்தரகோசமங்கை அக்னி தீர்த்த குளத்தில் விசேஷ தீபாராதனை
ADDED :1733 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு அக்னி தீர்த்தக் குளத்தில் மகாதீபாராதனை விழா நடந்தது. மங்களநாத சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அக்னி தீர்த்த குளத்தை சுற்றி 108 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தெப்பகுளத்தில் நுழைவாயிலில் ஐந்து வகையான அலங்கார தீபாராதனைகள், தூபங்கள் வேதமந்திரங்கள் முழங்க ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவாயநம மந்திரத்தை முழங்கினர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை மாத பவுர்ணமி கிரிவலக் குழுவினர், சமுத்திர ஆர்த்திக்குழுவினர், தர்ம ரக்ஷண சமிதியினர் செய்திருந்தனர்.