பழநியில் திருக்கல்யாணம் நாளை தேரோட்டம்
ADDED :4878 days ago
பழநி: பழநி வைகாசி விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. நாளை தேரோட்டம் நடக்க உள்ளது. பழநி கோயில் வைகாசி விசாகத் விழா, மே 28 ல் துவங்கி, ஜூன் 6 வரை நடக்கிறது. பெரியநாயகி அம்மன் கோயிலில், இன்று இரவு 7 மணி முதல் இரவு 8 மணிக்குள் திருக்கல்யாணம்நடக்க உள்ளது. நாளை காலை 11 மணிக்கு திருத்தேர் ஏற்றம், மாலை 4.20 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4 ல், தங்கக் குதிரை வாகனத்திலும், மறுநாள் மயில் வாகனத்திலும் முத்துக்குமார சுவாமி வீதி உலா நடக்கும்.