ஸ்ரீசெல்வமுளை மாரியம்மன் கோயில் கும்பாபிஷகம்
ADDED :1753 days ago
சத்திரபட்டி : சத்திரபட்டி வடக்கு தெரு சாலியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசெல்வமுளை மாரியம்மன் கோயில் கும்பாபிஷகம்நடந்தது. இதை முன்னிட்டு ஜன.,30 ல் காலை ேஹாமம், யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று யாத்ரா தானம், விக்னேஸ்வர பூஜையுடன் ராஜகோபுரத்திற்கு கோயில் தர்மகத்தா ஆறுமுகா குரூப் தலைவர் ஆறுமுகம் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு கும்ப நீர் தெளிக்கப்பட்டது.விழா நாட்களின்போது தினமும் மாலைவிரதம் மேற்கொண்ட பக்தர்கள் கும்ப நீரை ஊர்வலமாக எடுத்து சென்று வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக பூஜைகளை சுந்தரேச ஷர்மா நடத்தினார். ஆறுமுகம் பழனிகுரு மாடர்ன் பள்ளி தாளாளர் பழனிகுரு, ஆறுமுகா குரூப் இணை இயக்குனர்கள் அசோக், விமல், ஊர் தலைவர் சீனிவாசன் பங்கேற்றனர். அன்னதானமும் நடந்தது.