உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏம்பலம் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

ஏம்பலம் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

 புதுச்சேரி - ஏம்பலம் பூரணி பொற்கலை உடனுறை பிரம்ம நாராயண ஐயனாரப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.


நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் பகுதியில் பூரணி பொற்கலை உடனுறை பிரம்ம நாராயண ஐயனாரப்பன், தேச மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நேற்று காலை 9:05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தனபூஜை, கோ பூஜையுடன் துவங்கியது. மாலை 5 மணிக்கு முதல் கால யாகபூஜை ஆரம்பம், தீபாராதனை நடந்தது.இன்று(2ம் தேதி) காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜையும் நடக்கிறது. நாளை(3ம் தேதி) காலை 6 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், காலை 8:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 9:10 மணிக்கு மேல் கங்கையம்மன், தேச மாரியம்மன், ஐயனாரப்பன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு பூரணி பொற்கலை உடனுறை ஐயனாரப்பன் சுவாமி திருகல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !