சித்தி விநாயகர் கோவிலில் கலசாபிஷேக விழா
ADDED :1752 days ago
விழுப்புரம் : விழுப்புரம் சித்தி விநாயகர் கோவிலில், கலசாபிஷேக விழா நடைபெற்றது.
விழுப்புரம், ரங்கநாதன் ரோட்டில் உள்ள சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை மூவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலச ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக கலசம் கோவிலை வந்தடைந்தது.பின்னர், மூலவர் மற்றும் உற்சவருக்கு, கலச நீர் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சங்கு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., சின்னசாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.