உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் ஜோதிர்லிங்க தரிசனம் இன்று துவக்கம்

கரூரில் ஜோதிர்லிங்க தரிசனம் இன்று துவக்கம்

கரூர்: பிரம்மகுமாரிகள் இயக்க பவள விழாவையொட்டி இன்று கரூர் ஜி.ஆர்., திருமண மண்டப்பத்தில் ஜோதிர்லிங்க தரிசனம் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் அபுமலையை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரம்மகுமாரிகள் இயக்கம் பவள விழாவை கொண்டாடி வருகிறது. இதையொட்டி கரூரில் வரும் 5ம் தேதி பவள விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இன்று முதல் வரும் 5 ம் தேதி வரை ஜி.ஆர்., மண்டபத்தில் ஜோதிர்லிங்க தரிசனமும், நாளை (3ம் தேதி) கரூர் வள்ளுவர் திடலில் "கடவுள் ஒருவரை உலகம் ஒரு குடும்பம் என்ற தலைப்பில் உலக அமைதி தியான நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை பிரம்மகுமாரிகள் சென்னை பொறுப்பாளர் சிவக்குமார், கரூர் சாரதா, புதுவை கவிதா, நெல்லை சீதாதேவி ஆகியோர் கவனித்து வருகின்றனர். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும்: கமிஷனர் "அட்வைஸ் குளித்தலை: "தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து பொதுமக்கள் குடிக்க வேண்டும் என குளித்தலை நகராட்சி கமிஷனர் கலைமணி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது: குளித்தலை பகுதி முழுவதும் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுகாதார கேடுவினால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் நகராட்சி சுகாதார துறையின் மூலம் கொசுக்கள் அழிக்க மருந்து தெளிப்பு மற்றும் இரவு நேரங்களில் புகை மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. தேக்கமான குப்பைகளை பொதுமக்கள் சுகாதார பணியாளர்களிடம் கொடுத்தால் குப்பைகள் தேக்கம் ஏற்படாத வண்ணம் தடுக்கப்படும். தமிழகத்தில் குப்பை மற்றும் கொசுக்கள் மூலம் தொற்றுநோய் பரவுவதால் பொதுமக்கள் குடிநீரை காயவைத்து குடிக்க வேண்டும். மேலும், குழந்தைகள், முதியோர்களுக்கு பாதுகாப்பான திண்பண்ட சாப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !