உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திண்டுக்கல் : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷன பைரவர் அருள்பாலித்தார்.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.] அன்னதானம் வழங்கப்பட்டது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. 16 வகை அபிேஷகத்துடன், மூலவர், நந்தி, விநாயகருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதே போல், மெய்கண்ட சித்தர் குகையில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கன்னிவாடி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !