மங்களம் தரும் செவ்வாய்
ADDED :1889 days ago
‘சிவம்’ என்பதற்கு ‘மங்களம்’ என்பது பொருள். பார்வதிக்கு ‘மங்களாம்பிகை’ எனப் பெயருண்டு. ‘சர்வ மங்கள மாங்கல்யே சிவே’ என்று அம்பிகையின் மங்களத் தன்மையை குறிப்பிடுவர். இவர்களின் பிள்ளையான முருகப்பெருமானும் மங்களத்தன்மை மிக்கவர் என்பதால் மங்களவாரமான செவ்வாய்க்கிழமையில் வழிபடுவது சிறப்பு. நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு ‘மங்களன்’ என்றும் பெயருண்டு.
செவ்வாயன்று சிவன், பார்வதி, முருப்பெருமானை வழிபடுவோரின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும். செவ்வாய்க்கிழமையில் வரும் தேய்பிறை சதுர்த்தியை ‘அங்காரக சதுர்த்தி’ என்பர். இந்நாளில் விநாயகருக்கு விளக்கேற்றி வழிபட்டால் கடன்பிரச்னை தீரும். செவ்வாய் தோஷம் விலகி திருமணம் நடந்தேறும்.