திருப்பரங்குன்றத்தில் பிப்., 11 முதல் தங்க ரதம்
ADDED :1750 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்., 11 முதல் மீண்டும் தங்க ரதம் புறப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இக்கோயில் திருவாட்சி மண்டபத்தை சுற்றி தங்கரதம் புறப்பாடு நடக்கும். தங்க ரதம் இழுக்க ஒருவருக்கு ரூ. 2 ஆயிரம் கட்டணம். கொரோனா தடை உத்தரவிற்கு பின் தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன் அர்ச்சனை, பாலாபிஷேகம், பூ, மாலை சாத்தப்படி, சண்முகார்ச்சனை, உபய திருக்கல்யாணம் நடத்த அனுமதிக்கப்பட்டது. பிப்., 11 முதல் மீண்டும் தங்க ரதம் புறப்பாடு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட தங்க ரதம் பழுதுநீக்கி, சுவாமி இன்றி நேற்று திருவாட்சி மண்டபத்தில் வலம்வந்தது.