வடமதுரை கோயிலில் ஏலம் ஒத்திவைப்பு
ADDED :1745 days ago
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் வாரச்சந்தையில் வரி வசூல் உரிமம், பாதுகாப்பு நிலையம் அமைத்தல், தங்கம்மாபட்டி வண்டிகருப்பண சுவாமி கோயிலில் எறிகாசு சேகரித்தல், வாகன பாதுகாப்பு, சிதறு தேங்காய் சேகரிப்பு உரிமங்களுக்கான மறுஏலம் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமை வகித்தார். ஆய்வாளர் முத்துச்சாமி, செயல்அலுவலர் மாலதி முன்னிலை வகித்தனர். சந்தையில் நடப்பாண்டில் ஆறு வாரங்கள் கோயில் ஊழியர்களால் வசூலிக்கப்பட்டு விட்டதால் ஏலத்தொகை ரூ.4.90 லட்சமாக குறைக்கப்பட்டது. இது அதிகம் என யாரும் ஏலம் எடுக்கவில்லை.அதேபோல வண்டி கருப்பணசுவாமி கோயிலில் 3 இனங்களுக்கான ஏலத்தை கேட்க யாரும் வராததால் ஒத்தி வைக்கப்பட்டது. ஏலம் முடிவாகும் வரை கோயில் ஊழியர்களே வசூல் பணியை கவனிப்பர் என செயல் அலுவலர் தெரிவித்தார்.