கும்பமேளா யாத்திரைக்கு விமான சுற்றுலா வசதி
சென்னை : இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., கும்பமேளாவுக்கு, யாத்திரை சுற்றுலா விமானத்தை இயக்குகிறது.
இந்த சுற்றுலாவில், உத்ரகண்ட் மாநிலத்தில், ஹரித்வார், தேவ்பிரயாகை; உத்திரபிரதேசத்தில், அயோத்தி ராம ஜென்மபூமி கோவில்களில் தரிசனம் செய்யலாம். காசியில் கங்கையில் நீராடி, முன்னோர்களுக்கு பூஜைகள் செய்யலாம். காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும், அன்னபூரணி கோவில்களுக்கு சென்று வரலாம்; திரிவேணி சங்கமத்தில் நீராடலாம்.பீஹாரில் கயா பல்குனி நதியில், முன்னோர்களுக்கு மரியாதை செய்யலாம். ஆக்ராவில், தாஜ்மஹால்; மதுராவில், கிருஷ்ண ஜென்மபூமிக்கு சென்று வரலாம். மொத்தம், 12 நாட்கள் யாத்திரைக்கு, ஒருவருக்கு, 48 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம். மேலும் தகவலுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை அலுவலகத்தை, 90031 40682, 82879 31973 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்; www.irctct0urism.com என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.