மாசி மக உற்சவம்: விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி
ADDED :1706 days ago
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவத்தில், விபசித்து முனிவருக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி இன்று நடந்தது.
விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் இன்று (பிப்.,22) ரிஷப வாகனத்தில் விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளி, விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. மாசி மக திருவிழா ஆறாம் நாள் விழாவில் வீதியுலாக்கு வெளியே வந்த உற்சவ மூர்த்திகளுக்கு பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.