உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாந்துாரில் மீனாட்சி சிலை கண்டெடுப்பு

வாலாந்துாரில் மீனாட்சி சிலை கண்டெடுப்பு

 உசிலம்பட்டி : உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் அருகே வேலை உறுதியளிப்பு திட்ட பணியின் போது உலோகத்தாலான மீனாட்சி அம்மன் சிலை இடுப்புக்கு கீழ் சேதமுற்ற நிலையில்  கண்டெடுக்கப்பட்டது.

கொடிக்குளம் ஊராட்சி பிரவியம்பட்டி மயான புறம்போக்கு பகுதியில் 100 நாள் பணியில் மக்கள் ஈடுபட்டனர். ஜெயமணி 55, மண்வெட்டியால் தோண்டியபோது உலோகப் பொருள் தட்டுப்பட்டது.  அப்பகுதியை தோண்டிய போது இச்சிலை கிடைத்தது. ஒரு அடி உயரம், 10 இன்ச் அகலத்துடன் 4.400 கிலோ கிராம் எடையில் உள்ளது. இரண்டு தோள்களிலும் கிளிகள், நெற்றியில் நாமம் அணிந்து,  காதுகள் வளர்த்து அணிகலன்கள் அணிந்த நிலையில் சிலை வடிமைக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் (கொடிக்குளம்) ராமசாமி, (வாலாந்தூர்) செல்வம் பெற்று போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !