இறைவனைப் பிரார்த்திப்பது மூலம் மரணத்தை வெல்ல முடியுமா?
ADDED :4873 days ago
பிறந்த உயிர்கள் அனைத்தும் இறந்தே தீரவேண்டும் என்பது நியதி. அதனால், என்றாவது ஒருநாள் மரணத்தை சந்தித்துத் தான் ஆகவேண்டும். மரணத்தை வெல்லும் நிலையை மரணமில்லாப் பெருவாழ்வு முக்தி என்று சொல்வர். இந்நிலையை எல்லோராலும் அடைய முடியாது. விருப்பு வெறுப்பற்ற நிலையைக் கடந்த அருளாளர்கள், பக்தியின் மூலம் முக்திநிலை பெறுவர். சாமான்யர்கள் ஜனன, மரண சக்கரத்தை விட்டு எளிதில் வெளியேற முடிவதில்லை.