அகத்தியர் கோயிலில் பவுர்ணமி பூஜை
ADDED :1690 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே உள்ள அகத்தியர் கோயிலில் மாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.