/
கோயில்கள் செய்திகள் / பெற்றவர்கள் எனக்கூட பாராமல் வம்புக்கு சண்டை இழுக்கும் பிள்ளைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பெற்றவர்கள் எனக்கூட பாராமல் வம்புக்கு சண்டை இழுக்கும் பிள்ளைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ADDED :4972 days ago
இதற்கு பிள்ளைகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. பெற்றவர்கள் சிலர், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகும் பிள்ளைகளை சுதந்திரமாக முடிவெடுக்க விடாமல் செய்வதன் விளைவாகவும் இருக்கும். இன்றிருக்கும் காலச் சூழ்நிலையில், பிள்ளைகளுக்கு திருமணமாகி விட்டால் பெற்றவர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். பெற்றவர்களுக்கு உடல்நிலை முடியாமல் போனால், அவர்களை பிள்ளைகள் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளும் பெற்றோரும் ஈகோ பார்த்தால் இரு தரப்புக்கும் நிம்மதி இராது.