சிறப்பு அலங்காரத்தில் நித்ய கல்யாணபெருமாள்
ADDED :1760 days ago
காரைக்கால்; காரைக்கால் நித்ய கல்யாணபெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். காரைக்கால் பாரதியார் சாலை நித்யகல்யாண பெருமாள் கோவில் மாசி மாதத்தை முன்னிட்டு பிரம் மோற்சவ விழா நடந்து வருகிறது. நேற்று மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. அறங்காவலர் வாரியத் தலைவர் கேசவன், செயலாளர் பக்கிரிசாமி, துணை தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் உட்பட பலர் பங்கேற்றனர்.