உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிக்காவலசு ஸ்ரீசக்தி மஹா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

காளிக்காவலசு ஸ்ரீசக்தி மஹா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

சென்னிமலை: காளிக்காவலசு ஸ்ரீ சக்தி மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடந்தது. சென்னிமலை, முருங்கத்தொழுவு, காளிக்காவலசில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி மஹா மாரியம்மன் கோவிலை புதுப்பித்து கட்டப்பட்டது. இக்கோவில்களுக்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை, கோபுர கலசம் வைத்தல், வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையை தொடர்ந்து, 8:00 மணிக்கு மேல் மூலவருக்கு கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !