திருப்புல்லாணியில் பக்தர்கள் வசதிக்காக நிழல் பந்தல்
ADDED :1758 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாந பெருமாள் கோயில் வைணவத் திருத்தலங்களில் 44 ஆவதாக திகழ்கிறது.
இங்கு வைகுண்ட ஏகாதிசி உள்ளிட்ட இதர விசேஷ தினங்களிலும் உற்ஸவ மூர்த்தி பிரகார வீதி உலா வருவது வழக்கம். கோயிலின் இரண்டாம் சுற்றுப் பிரகாரம் திறந்தவெளியாக இருப்பதினால் வெளியில் மழை காலங்களில் வீதி புறப்பாடு சிரமமாக இருந்தது. இந்நிலையில் உபயதாரர் ஒருவரின் முயற்சியால் நிழல் பந்தல் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இதன் மூலம் வெயிலின் தாக்கம் குறைந்து பக்தர்கள் திருப்தியுடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.