உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரர் கோவிலில் அவதார திருவிழா

ராகவேந்திரர் கோவிலில் அவதார திருவிழா

திருப்பூர்: ஸ்ரீராகவேந்திரர் அவதார தினத்தையொட்டி, ராகவேந்திரர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திருப்பூர் பார்க்ரோடு, ஸ்ரீராகவேந்திரர் கோவிலில், ராகவேந்திரர் அவதார திருநாளான நேற்று, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. காலை, 7:00 மணிக்கு அபிஷேக பூஜையை தொடர்ந்து, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீசீதாராம, ஸ்ரீகுருராகவேந்திர அஷ்ராக் ஷர ேஹாமம் மற்றும் பூர்ணாஹூதி நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, மகாதீபாராதனையை தொடர்ந்து, பஜனை நடந்தது. மாலை, 6:30 மணிக்கு ரதா சேவையும், பல்லக்கு சேவையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !