அன்னம் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா
ADDED :1994 days ago
சிவகங்கை: காசி விஸ்வநாதர் கோயிலில், சுப்பிரமணிய சுவாமி பங்குனி திருவிழாவை முன்னிட்டு மார்., 19ல் கொடியோற்றம் நடைபெற்றது. பங்குனி திருவிழா முன்னிட்டு சிறப்பு தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறார். விழாவை முன்னிட்டு, நேற்று அன்னம் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.