பரமக்குடி சாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றின் கரையில் உள்ள சாத்தாயி அம்மன் கோயிலில் புதிய மூன்று நிலை ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடந்தது.
இக்கோயிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி, மார்ச் 22அன்று காலை 10:00 மணிக்கு அனுக்கை, விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. மாலை 4:00 மணி தொடங்கி வாஸ்து சாந்தி, ரக்சா பந்தனம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு கும்பஅலங்காரம்,கலாகர்சனம், இரவு 9:00 மணிக்கு முதல் கால யாக பூஜை,பூர்ணாகுதி நடந்தது. மார்ச் 23 ல் காலை 9:00 மணி தொடங்கி 2ம் கால யாகபூஜையும்,இரவு 3ம் கால யாக பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று அதிகாலை 3:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜைகள்துவக்கப்பட்டு, 5:00 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையில் இருந்து, தீர்த்த குடங்கள் புறப்பாடாகின. தொடர்ந்து காலை 5:30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்கராஜகோபுரம், மூலவர் விமானத்திற்கு மகா அபிஷேகம் நடந்தது.பின்னர் மூலவர் சாத்தாயி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் வேதபாராயணம், தேவாரம்,திருமுறை பாராயணம் இசைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டிதலைவர் நடராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.