உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோலாகலம்

பழநியில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் கோலாகலம்

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழநி திருஆவினன்குடி கோயிலில் மார்ச் 22ல் கொடியேற்றம் நடந்தது. ஆறாம் நாளான இன்று இரவு 7:15 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு திருமணக் கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. நாளை மார்ச் 28, பங்குனி உத்திர நாளில் காலையில் தந்த பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு தேரில் எழுந்தருளல், மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் கிரிவீதியில் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், இரவில் வெள்ளிக் காமதேனு, ஆட்டுக்கிடா, உட்பட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. மார்ச் 31 ல் கொடியிறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.பிரசாரம் ரத்துதிருக்கல்யாணம், தேரோட்டத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால், இன்றும், நாளையும் பழநி நகரில் வாகனங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !