உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்

சிவகங்கை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டுசிவகங்கை சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய தேரோட்டம் நடந்தது.


சிவகங்கை காசி விஸ்வநாதர் ஆலயம் சுப்பிரமணிய சன்னதியில்மார்ச் 19 அன்று கொடியேற்றத்துடன் பங்குனிஉத்திர திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.விழாவின் 9ம் நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு அலங்கரித்த தேரில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையருடன் எழுந்தருளினார். விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளினார். சுவாமிக்குசிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.பின்னர் பக்தர்கள் அனைவரும் தேர் வடம் பிடித்து நேற்று மாலை 4:35 மணிக்கு தேரோட்டம்தொடங்கியது. ஏராளமானபக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தேரை இழுத்து சென்றனர்.நேற்று இரவு புஷ்ப பல்லக்கு நடந்தது. விழாவின் 10ம் நாளான இன்று தீர்த்தவாரி உற்ஸவமும், இரவு 10:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !