உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்ணத்திருவிழா ஹோலி கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து

வண்ணத்திருவிழா ஹோலி கோலாகலம்: தலைவர்கள் வாழ்த்து

 புதுடில்லி: வட மாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்கு பிரதமர் மோடி , காங்., முன்னாள் தலைவர் ராகுல் மற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது வாழ்த்தில்; நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகவும் இனிய ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தை தரும் இந்த திருவிழா, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புதிய வீரியத்தையும் புதிய ஆற்றலையும் பெருக்கட்டும்.

காங்., எம்.பி.ராகுல் அவரது டுவிட்டரில்: அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள். திருவிழா நம் நாட்டின் பன்முகத்தன்மையின் ஒவ்வொரு நிறத்தையும் குறிக்கிறது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில்: அனைத்து நாட்டு மக்களுக்கும் ஹோலி வாழ்த்துகள், இந்த வண்ணங்களின் திருவிழா உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.கொரோனாவிலிருந்து விலகி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !