சென்னிமலையில் மகா தரிசனம்: பங்குனி உத்திர விழா நிறைவு
ADDED :1753 days ago
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்திருவிழா, மகாதரிசன நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. சென்னிமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம், கடந்த, 27ல் நடந்தது. கொரோனா வைரஸ் பரவலால், பெரிய தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, சகடை தேரில் நான்கு ராஜவீதிகளில் சுவாமி வலம் வந்தது. தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் பரிவேட்டை, தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. நிறைவு விழாவான மகா தரிசனம் நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.