முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி: பக்தர்கள் பரவசம்
ADDED :1695 days ago
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.
நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் ல் கொடியேற்றுடன் தொடங்கியது.விழாவில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் உலா வருதல் நடந்தது.இதை தொடர்ந்து பொங்கல், அக்னிசட்டி என பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை பூக்குழி இறங்குதல் நடந்தது. கோயில் முன்பு வளர்க்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் பரவசத்துடன் தீ மிதித்தனர். வாயில் அலகு குத்தி கொண்டும் பூக்குழி இறங்கினர். இதை தொடர்ந்து அம்மன் புஸ்ப பல்லக்கில் பவனி வந்தார்.